Sunday 10 November 2013

நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்

நாட்டை துண்டாடியதன் மூலம் இந்தியாவின் புவியில் அமைப்பை மாற்றிய பாவத்தை காங்கிரஸ் கட்சி தான் செய்தது என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு



குஜராத்தின் கேடா மாவட்டத்தில் முஸ்லிம் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் பங்கேற்ற மோடி பேசியதாவது:-

பிரதமர் அவர்களே... நீங்கள் என்ன சொல்ல வேண்டும்? என்ன சொல்ல கூடாது? என்பதை முடிவெடுக்கும் சக்தி உங்கள் கையில் இல்லை என்பதை நான் நன்கறிவேன்.

ஆனால், இந்த நாட்டின் புவியியல் அமைப்பை மாற்றியது யார்? என்பதை மக்கள் அறிந்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

நீங்கள் பிறந்த கிராமம் முன்னர் இந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இப்போது இல்லை.

முன்னர் இருந்த இந்துஸ்தானத்தின் புவியியல் அமைப்பை மாற்றியது யார்? இந்த நாட்டை துண்டுகளாக உடைத்தவர்கள் யார்? என்பதை அறிந்துக் கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.

இந்தியாவை இரண்டாக பிரித்து நாட்டை துண்டாடிய பாவத்தை செய்தது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், புவியியலை நாங்கள் மாற்றுவதாக நீங்கள் கூறி வருகிறீர்கள்.

தொடர்ந்து அவ்வப்போது எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்தியாவின் நூற்றுக் கணக்கான சதுர கிலோமீட்டர் நிலப்பகுதி இப்போது சீனாவின் பிடியில் உள்ளது.

இந்த புவியியல் மாற்றத்துக்கு இடமளித்தது யார்? காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தானே இது நடந்தது?

இவ்வாறு அவர் பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மன்மோகன் சிங், 'ஒரு சிலர் மேடை கிடைத்தால் போதும் என்று இந்தியாவின் வரலாற்றையும், புவியியலையும் மாற்றி,மாற்றி பேசுகிறார்கள்' என்று மோடியை மறைமுகமாக தாக்கி பேசினார்.

கடந்த வாரம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மன்னர் சித்ரகுப்த மவுரியரை குப்த வம்சத்தை சேர்ந்தவர் என்றும், பாகிஸ்தானில் உள்ள தக்சசீலம் பகுதியை பீகாரில் உள்ள பகுதி என்றும் பிழையாக பேசினார்.

அதை நினைவூட்டும் வகையில்தான் மோடி மீது நேற்று முன்தினம் பிரதமர் மறைமுக தாக்குதல் தொடுத்தார்.

பிரதமரின் இந்த தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையில் மோடி மேற்கண்டவாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: மாலைமலர்

No comments:

Post a Comment

linkwithin

ilamthamarai