Friday 11 October 2013

ரூ. 40 கோடி செலவில் நரேந்திர மோடி வாழ்க்கை சினிமா படமாகிறது


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல் நடிக்கிறார். இவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
பரஷ் ராவல் ஏற்கனவே சர்தார் வல்லபாய் படேல் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சர்தார் படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ஓ மைகாட் என்ற படத்தை தயாரித்து உள்ளார். பரேஷ் ராவலும் நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். நரேந்திர மோடியை அவர் நேரில் சந்தித்து பேசி படத்துக்கான ஒப்புதலை பெற்றுள்ளார்.

ரூ. 40 கோடி செலவில் நரேந்திர மோடி வாழ்க்கையை படமாக்க அவர் திட்டமிட்டு உள்ளார். நரேந்திர மோடியின் இளமைக்கால நிகழ்வுகள், அரசியல் பிரவேசம், குஜராத் முதல்– மந்திரியாக இருந்து ஆற்றிய பணிகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இப்படத்தில் இடம் பெற உள்ளது.

சிறு வயதில் டீ கடையில் பணியாற்றியது, பள்ளி வாழ்க்கை, அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் ஓட்டல் நடத்தியது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியது, பாரதீய ஜனதாவில் சேர்ந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் படமாக்கப்பட உள்ளது. படப்பிடிப்பை விரைவில் துவங்க ஏற்பாடுகள் நடக்கிறது.

No comments:

Post a Comment

linkwithin

ilamthamarai