Saturday 28 September 2013

இளம் தாமரை மாநாடு


இளம் தாமரை மாநாடு,செப்டம்பர் 26 ,2013, திருச்சி ,தமிழ்நாடு

மாநாட்டின் பிரமாண்ட முகப்பு மேடைத் தோற்றம்





மாநாட்டிற்க்கு வருகைத் தரும் தொண்டர்கள்

மாநாட்டில் வைக்கப் பட்ட  கட் அவுட்கள்
மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள்
மேடையில் பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கு மாலை அணிவித்தல்.
மேடையில் எழுச்சியுரையாற்றும் பிரதம வேட்பாளர் திரு .நரேந்திர மோடி அவர்க்ள்








படிப்போம்; பகிர்வோம்


படிப்போம்; பகிர்வோம்

First Published : 21 September 2013
தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.
ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, நிகழ்வுகளைப் பார்க்கும்போதோ அவை உள்ளது உள்ளவாறே மனதில் பதிந்துவிடும்.
நாளிதழ்களில் மேம்போக்காக தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டுச் செல்வதைத் தவிர்த்து, சற்று உன்னிப்பாகப் படித்தால் பல புதிய சொற்களையும், சொற்றொடர்களையும், பயன்பாடுகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
அரசியல் தொடங்கி அறிவியல் வரை ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பல புதிய சொற்கள் உருவாகின்றன. தொடர்ந்து படித்தால்தான் அவ்வப்போது அறிமுகமாகின்ற புதிய சொற்களைப் புரிந்துகொள்ள முடியும். "அதற்கெல்லாம் தேவையில்லை', "வாசித்து என்ன ஆகப்போகிறது?' அவ்வப்போது இணையதளங்களில் பார்த்துவிடுகின்றோம்' என்றெல்லாம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
அறிவியல், பக்தி, சோதிடம், திரைப்படம் வேலை வாய்ப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகள் வெளிவரும் நாள்கள் மட்டுமே செய்தித்தாளை வாங்குவதை விட்டு அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செய்தித்தாளை தெரிவு செய்து, அதனை தினமும் படிப்பதை நடைமுறையில் கொள்வது நல்லது. அப்பொழுதுதான் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும். என்றாவது ஒருநாள் படிக்காமல் விட்டுவிட்டால் அன்று வந்திருந்த முக்கியமான செய்தியையோ, கட்டுரையையோ நாம் இழக்க நேரிடும். கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ தினமும் 300 பக்கங்களுக்கு மிகாமல் உலகச் செய்திகளைப் படிப்பாராம்.
பல அரசியல் பிரமுகர்களும், வேறு பல துறையைச் சார்ந்தவர்களும் தினமும் படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள்ளூர் செய்தி தொடங்கி உலகச் செய்திகள் வரையில் அறிய, நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது நாளிதழைப் படிப்பதற்காக ஒதுக்குவது நல்லது.
அவ்வாறே நூல் படிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். கதைகள், கட்டுரைகள், சாதனையாளர்களின் வரலாறு, ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல், பயணக்கட்டுரைகள் என பலவகையான நூல்கள் உள்ளன. சார்லி சாப்ளினுக்கு புதிய சொற்கள் மேல் அலாதிப் பிரியம் என்றும், தினமும் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார் என்றும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவார் என்றும் கூறுவர். அவர் தன்னுடைய சுயசரிதையில் அதிகமான புதிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூல் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளும் முன்பாக எந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஐயம் மனதில் தோன்றும். பல நூல்களைப் படிக்கப் படிக்க நாளடைவில் தானாகவே எந்த நூலைப் படிப்பது என்ற தெளிவு கிடைத்துவிடும்.
நூல் என்பது நமக்கு சிறந்த நண்பன் என்பதை மனதில் கொண்டு, நாளிதழ் வாசிக்க நேரம் ஒதுக்குவதைப் போல தினமும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் ஏதாவது ஒரு நூலைப் படிப்பது நல்லது.
படிப்பதால் மனம் தெளிவாகிறது. நினைவாற்றல் பெருகுகிறது. நற்சிந்தனை மேம்படுகிறது. நாளிதழ்களைப் படிப்பதால் அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே நூல்களைப் படிக்கும்போது நமக்குள் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலிட ஆரம்பிக்கிறது.
ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம் வரலாறு படிப்பதோடு மட்டுமன்றி வரலாறு படைக்கவும் வேண்டும் என்று கூறுவாராம். அவ்வாறான உயரிய சிந்தனையை மனதில் வைத்து வரலாற்றைப் படைக்க முடியும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும்.
நாளிதழையோ, நூலையோ படித்து முடித்தபின்னர் நண்பர்களிடமும், குடும்பத்தாரிடமும் படித்தவை பற்றி விவாதிக்கலாம். அதன் மூலம் பல புதிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புதிய சொல், புதிய செய்தி, புதிய உத்தி, புதிய நடை, புதிய வரலாறு என்று ஒவ்வொரு நிலையிலும் ரசித்து ரசித்துப் படிக்கலாம்.
இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் வாசிப்புப் பழக்கத்தை இன்று முதல் தொடங்கலாம். நண்பர்களையும் இவ்விதப் பழக்கத்தை மேற்கொள்ள அறிவுறுத்தலாம். வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்கி, வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்கி நூல் எண்ணிக்கையைப் பெருக்கினால் வீடும் நாடும் வளம் பெறும்.
நன்றி : தினமணி நாளிதழ்

Friday 27 September 2013

பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்


பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் மாநாட்டில் பேசினார். பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இதனை அடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வந்தார்.

சென்னையில் செய்தியாளார்களை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங், கூட்டணி குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்று கூறினார். பாரதீய ஜனதா 450 இடங்களில் போட்டியிடும். அதில் 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பெயரில் செயல்படுகிறது என்றும் ராஜ்நாத் கூறினார்.
தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்காமல் இருப்பது தொடர்பான பொதுநல மனு குறித்தான விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட்டு யாருக்கும் ஓட்டுபோட விருப்பம் இல்லை என கூறி வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று கூறியது. ஓட்டு போட விருப்பம் இல்லை என பதிவு செய்ய ஓட்டு பதிவு இயந்திரத்தில் புதிய பட்டனை பொறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வரவேற்க தாக்கது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருகையையொட்டி, தியாகராயநகர் கமலாலயம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி


நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்தியில் வலிமையான அரசு தேவை என்று நரேந்திர மோடி கூறினார்.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
அரியானா மாநிலம்ரெவாரியில் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில்பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில்முதன் முதலாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக நல்ல செய்திகளுக்காக தவித்து வருகிறது. தோல்விகளும்ஏமாற்றங்களும்தான் செய்திகளாக வந்தன. இந்த நிலையில் இன்று (நேற்று) காலை ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அக்னி–5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து முடித்துள்ள விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள்.
டெண்டர்களில் கவனம்
நமது விஞ்ஞானிகளுக்கு அக்னி–5 ஏவுகணையை ஏவி சோதிக்கிற ஆற்றல் இருக்கிறது. ஆனால் ராணுவத்துக்கு தேவையான சின்னஞ்சிறு தளவாடம் கூட இறக்குமதிதான் செய்யப்படுகிறது. ராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதிஇறக்குமதிக்கே செலவிடப்படுகிறது.நாம் ராணுவ தளவாட உற்பத்தியில் தகுதி வாய்ந்தவர்கள் ஆக வேண்டும். ஆயுதங்களையும்வெடிபொருட்களையும் ஏற்றுமதி செய்கிற நிலை வரவேண்டும். ஆனால் உள்நாட்டில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு கவனம் செலுத்துவதில்லை. டெல்லியில் உட்கார்ந்து ஆட்சி செய்கிறவர்கள் டெண்டர்களில்தான் கவனமாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தான்சீனா
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிக்கொண்டிருக்கிறது. சீனாவும் எல்லையில் நமக்கு சவால் விடுக்கத்தொடங்கி இருக்கிறது. இதெல்லாம் நமது வீரர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல. டெல்லியில் உள்ள பிரச்சினைகள்தான் காரணம்.எல்லையில் பிரச்சினை இல்லை. டெல்லியில்தான் பிரச்சினை உள்ளது. டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். தேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகிற தேசப்பற்றுமிக்கதகுதிவாய்ந்தவலிமையான அரசுதான் டெல்லியில் தேவை. தகுதி வாய்ந்த ஒரு அரசால்தான் நாட்டின் பாதுகாப்பையும்மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
ராணுவத்துக்கு பாராட்டு
டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு ராணுவ வீரர்களை மதிப்பதில்லை. குஜராத் பூகம்பத்தின்போது ராணுவம் ஆற்றிய அளப்பரிய சேவையை என்னால் மறக்க முடியாது. உத்தரகாண்ட் துயரத்தின் போதும்மக்களின் உயிர்காக்க ராணுவத்தினர் தங்கள் உயிரை இழந்தனர்.ஒட்டுமொத்த தேசமும் ராணுவத்தினரின் சேவையை புகழ்ந்து பேசுகிறபோதுஎல்லையில் நமது வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொல்கிறது. ஆனால் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம் அல்லராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் நமது ராணுவ மந்திரி சொல்கிறார்.
மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கிற நமது அரசியல்வாதிகள்உண்மையான மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை நமது ராணுவத்தினரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் ராணுவத்திற்கு கூட மதச்சாயம் பூசுகின்றனர்.பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்நான் உங்களுடன் (முன்னாள் ராணுவத்தினருடன்) இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பாகிஸ்தானுடனான போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக குஜராத் அரசு எல்லையில் நினைவுச்சின்னம் அமைத்திருக்கிறது. எல்லையின் கடைசி சாவடிக்கு குடிநீர் வசதி கிடைப்பதற்காக 700 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைத்துக்கொடுத்திருக்கிறோம்.நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்தியில் வலிமையான அரசு தேவை நரேந்திர மோடி பேச்சு
இப்போது போரின் தன்மை மாறி விட்டது. மறைமுகப்போரால்தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் என்ற பெயரால் நடத்தப்படுகிற போரால் உலகம் இன்றைக்கு கவலைக்குள்ளாகி இருக்கிறது. தீவிரவாதம்மாவோயிசம் ஆகியவற்றை ஒடுக்குவதில் உலகளவில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.இந்தியாவை பொறுத்தமட்டில் நல்ல தலைமை இருந்தால்தீவிரவாதத்தையும்மாவோயிசத்தையும் ஒடுக்குவது என்பது கடினமான காரியம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் மாநாடு


நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்ட காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அகற்ற உறுதி ஏற்போம் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் மாநாடு
அமெரிக்காவில் வசித்துவரும் பாரதீய ஜனதா கட்சி நண்பர்கள் அமைப்பின் நாள் மாநாடுபுளோரிடா மாகாணத்தில் டாம்பா நகரில்  முடிந்தது. நிறைவு விழாவில் குஜராத் முதல்மந்திரியும்பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிகாணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வாஜ்பாய் ஆட்சியில்இந்தியாவுக்கு மட்டுமல்லஉலகத்துக்கே ஒரு புதிய பாதை காட்டப்பட்டது. அப்போது 21–ம் நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு என்ற தோற்றம் ஏற்பட்டது.
ஆனால் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி மாறிய பிறகுநமது கனவுகள் சிதைந்து போய்விட்டன. நமது தேசத்தின் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது.
உறுதி ஏற்போம்
டெல்லியில் வீற்றிருக்கிற மத்திய அரசின் அகந்தையைப் பாருங்கள். அவர்கள் ஆண்டு காலமாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தொடர்பான செயல்பாட்டு அறிக்கையை அளிக்க அவர்கள் தயாராக இல்லை.
சொந்த நலனில் அக்கறை உள்ள ஒரு கூட்டம்தான் கேடயமாக இருந்து காங்கிரசை பாதுகாத்து வருகிறது. அந்த கூட்டம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் நாம் இந்த கூட்டத்தையும்காங்கிரசையும் எதிர்த்து நின்று போராட வேண்டும். இந்த நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்ட இந்த ஆட்சி அகல வேண்டும். ஜனநாயக ரீதியில் இந்த ஆட்சி அகற்றப்படுவதற்கு நாம் உறுதி ஏற்போம். முற்போக்கான பாரதீய ஜனதா அரசு மத்தியில் அமைவதற்கு நாம் பாடுபட வேண்டும்.
மக்கள் குரல் பிரதிபலிக்கும்
1977–ம் ஆண்டு போலவே 2014–ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் குரல் பிரதிபலிக்கும்.
(1977–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி கண்டது. மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போதுபோலவே 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரும் என்பதையே சூசகமாக இப்படி குறிப்பிட்டார்.)
கண்ணீரை துடைக்கும் தேர்தல்
இந்த தேர்தல் எந்தவொரு நபருக்குமானதும் அல்லபதவிக்குமானதும் அல்ல. இது மக்களின் கனவுகளுக்கான தேர்தல். ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதற்கான தேர்தல். விவசாயிகள்சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர்பழங்குடி இன மக்களின் நலனுக்காக உழைப்பதற்கான தேர்தல்.
காங்கிரஸ் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்வாஜ்பாய் ஆட்சியிலே 8.4 சதவீத வளர்ச்சி காணப்பட்டது என்பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களாதற்போது 4.8 சதவீத வளர்ச்சிதான் இந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் காணப்பட்டுள்ளது.
பா.ஜனதாவால் மட்டுமே முடியும்
தற்போதைய நெருக்கடிகளில் இருந்து நாட்டை காக்க பாரதீய ஜனதாவினால் மட்டுமே முடியும். பாரதீய ஜனதா மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒரு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஏனென்றால்எப்போதெல்லாம் பாரதீய ஜனதாவுக்கு ஆள்கிற பொறுப்பு வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் சிறப்பான ஆட்சி தரப்படுகிறது.
அமெரிக்க வாழ் இந்திய சமூகத்தினர்இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய பணி ஆற்ற வேண்டும்.
இந்திய பாஸ்போர்ட்டுடன் வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் இந்தியாவில் வாக்காளர்களாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

linkwithin

ilamthamarai