Friday 27 September 2013

நரேந்திர மோடி


நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்தியில் வலிமையான அரசு தேவை என்று நரேந்திர மோடி கூறினார்.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
அரியானா மாநிலம்ரெவாரியில் முன்னாள் ராணுவத்தினர் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில்பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில்முதன் முதலாக நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக நல்ல செய்திகளுக்காக தவித்து வருகிறது. தோல்விகளும்ஏமாற்றங்களும்தான் செய்திகளாக வந்தன. இந்த நிலையில் இன்று (நேற்று) காலை ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அக்னி–5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து முடித்துள்ள விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள்.
டெண்டர்களில் கவனம்
நமது விஞ்ஞானிகளுக்கு அக்னி–5 ஏவுகணையை ஏவி சோதிக்கிற ஆற்றல் இருக்கிறது. ஆனால் ராணுவத்துக்கு தேவையான சின்னஞ்சிறு தளவாடம் கூட இறக்குமதிதான் செய்யப்படுகிறது. ராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதிஇறக்குமதிக்கே செலவிடப்படுகிறது.நாம் ராணுவ தளவாட உற்பத்தியில் தகுதி வாய்ந்தவர்கள் ஆக வேண்டும். ஆயுதங்களையும்வெடிபொருட்களையும் ஏற்றுமதி செய்கிற நிலை வரவேண்டும். ஆனால் உள்நாட்டில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு கவனம் செலுத்துவதில்லை. டெல்லியில் உட்கார்ந்து ஆட்சி செய்கிறவர்கள் டெண்டர்களில்தான் கவனமாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தான்சீனா
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறிக்கொண்டிருக்கிறது. சீனாவும் எல்லையில் நமக்கு சவால் விடுக்கத்தொடங்கி இருக்கிறது. இதெல்லாம் நமது வீரர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல. டெல்லியில் உள்ள பிரச்சினைகள்தான் காரணம்.எல்லையில் பிரச்சினை இல்லை. டெல்லியில்தான் பிரச்சினை உள்ளது. டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். தேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகிற தேசப்பற்றுமிக்கதகுதிவாய்ந்தவலிமையான அரசுதான் டெல்லியில் தேவை. தகுதி வாய்ந்த ஒரு அரசால்தான் நாட்டின் பாதுகாப்பையும்மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.
ராணுவத்துக்கு பாராட்டு
டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு ராணுவ வீரர்களை மதிப்பதில்லை. குஜராத் பூகம்பத்தின்போது ராணுவம் ஆற்றிய அளப்பரிய சேவையை என்னால் மறக்க முடியாது. உத்தரகாண்ட் துயரத்தின் போதும்மக்களின் உயிர்காக்க ராணுவத்தினர் தங்கள் உயிரை இழந்தனர்.ஒட்டுமொத்த தேசமும் ராணுவத்தினரின் சேவையை புகழ்ந்து பேசுகிறபோதுஎல்லையில் நமது வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கொல்கிறது. ஆனால் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம் அல்லராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் நமது ராணுவ மந்திரி சொல்கிறார்.
மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கிற நமது அரசியல்வாதிகள்உண்மையான மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை நமது ராணுவத்தினரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் ராணுவத்திற்கு கூட மதச்சாயம் பூசுகின்றனர்.பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்நான் உங்களுடன் (முன்னாள் ராணுவத்தினருடன்) இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பாகிஸ்தானுடனான போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக குஜராத் அரசு எல்லையில் நினைவுச்சின்னம் அமைத்திருக்கிறது. எல்லையின் கடைசி சாவடிக்கு குடிநீர் வசதி கிடைப்பதற்காக 700 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைத்துக்கொடுத்திருக்கிறோம்.நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்தியில் வலிமையான அரசு தேவை நரேந்திர மோடி பேச்சு
இப்போது போரின் தன்மை மாறி விட்டது. மறைமுகப்போரால்தீவிரவாதம் மற்றும் மாவோயிசம் என்ற பெயரால் நடத்தப்படுகிற போரால் உலகம் இன்றைக்கு கவலைக்குள்ளாகி இருக்கிறது. தீவிரவாதம்மாவோயிசம் ஆகியவற்றை ஒடுக்குவதில் உலகளவில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.இந்தியாவை பொறுத்தமட்டில் நல்ல தலைமை இருந்தால்தீவிரவாதத்தையும்மாவோயிசத்தையும் ஒடுக்குவது என்பது கடினமான காரியம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

linkwithin

ilamthamarai